By The Startups – பிசினஸ் நெட்வொர்க்கிங் சமூக குழு

நாங்கள் தென்னிந்தியாவின் முன்னணி மற்றும்  நம்பகமான  பிசினஸ் நெட்வொர்க்கிங் & ரெபரல் (பரிந்துரை)  லீட்ஸ் சமூக குழு


By The Startups Business Community இந்தியாவின், குறிப்பாக தமிழ்நாட்டின், சிறந்த பிசினஸ் மற்றும் தொழில்முனைவோர்களின் சந்திப்பு குழுக்களில் ஒன்று. இந்த Community கோவையில் 2016’ல் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு ஸ்டார்டப் துறை (TANSIM)யின் அங்கீகாரம் பெற்றது. இதன் நிறுவனர் ஷமீர் கோவை தெற்கு TANSIM’ன் Community வட்டார வலையின் தலைவராக இருக்கிறார்.

By The Startups குழு “ஸ்டார்டப் இந்தியா”வின் அங்கீகாரம் பெற்றது. சுமார் 4500+ தொழில்முனைவோரின் ஆதரவு பெற்றுள்ள குழு. மேலும், தமிழ்நாடு EDII-TNSTI (தமிழ்நாடு அரசு), மற்றும் இந்திய அரசின் MSME’யில் உள்ள IIC, MoU செல் போன்ற அமைப்புகளின் உறுப்பினராக செயல்பட்டுவருகிறது. By The Startups பல விருதுகளும் பெற்றுள்ள குழு. நாங்கள் உங்களின் வணிகத்தை பெருகவதில் ஆர்வமாக இருக்கின்றோம் . மேலும் நாங்கள் மாதம் தோறும் நடத்தும் நேரடி/ஒன்லைன் பிசினஸ் சந்திப்புக்கள், கலந்தாய்வுகள்,மூலம் உங்களின் வணிகம் வளர்ச்சிஅடைய உதவும்.

எங்கள் சமூகம் மூலமாக 10,000 சிறு வணிகங்களுக்கு ‘Business Visibility’ வழங்குவது மற்றும் உலகம் முழுவதும் உள்ள 1,00,000 தொழில்முனைவோர்களை ஒன்றிணைப்பது எங்கள் நோக்கமாகும். BTS ஒரு அங்கீகரிக்கப்பட்ட, பல விருதுகளை பெற்ற புத்தொழில்/வணிக சமூகமாக இருப்பதால், தனிநபர்களிடையே அர்ப்பணிப்பு, ஆதரவு மற்றும் விசுவாசத்தை எதிர்பார்க்கிறோம்.

 

 


எங்களின் சமூகத்திற்காக நிறைய செலவுகளை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம்.

உங்கள் அன்பான ஆதரவும் ஊக்கமும் எங்களுக்கு எப்போதும் தேவை!

BTS சமூகம் எங்கள் உறுப்பினர்களால் செலுத்தப்பட்டும் கட்டணத்தைப் பயன்படுத்தி மட்டுமே தினமும் செயல்பட,  மற்றும் உறுப்பினர்களுக்கு  சிறப்பாகச் சேவை செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ளவும். மேலும், அதன் பெரும்பகுதி இணைய பராமரிப்பு, கன்டென்ட் டெவெலப்மென்ட் மற்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் ஆகியவற்றின் செலவுகளை பூர்த்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது. எனவே, பணம் முறையாகவும் சரியான நேரத்திலும் எங்களுக்கு செலுத்த வேண்டும் என்பதே எங்கள் தாழ்மையான வேண்டுகோள். ஏனெனில், உறுப்பினர் சேர்க்கைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் சில அற்ப வணிக சமூகங்கள் போல் இல்லாமல், நாங்கள் மிகவும் நியாயமாகவும், எங்கள் மதிப்பு முன்மொழிவுக்கு உண்மையாக இருந்து வருகிறோம். எப்போதும் இருப்போம்.

Value (மதிப்பின் )அடிப்படையில் நாங்கள் நிச்சயமாக உங்களுக்குத் திருப்பித் தருவோம் என்பதால், தயவுசெய்து எங்கள் சமூகத்திற்கு ஆதரவளிக்கவும். நீங்கள் எவ்வளவு அதிகமாகப் பகிர்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாகப் பெறுவீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்!


BTS உறுப்பினர் சேர்ப்பு திட்டம்

BTS இந்தியாவின் முதல் சமூக குழு வழி பிசினஸ் விசிபிலிட்டி மற்றும் பொதுமதிப்பு தளம்

BTS’யில் எந்த உறுப்பினர்கள் சேர்க்கும் திட்டங்கள் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம். ஏன் என்றால் எந்தவொரு உறுப்பினர் விசுவாசம்/ தக்கவைப்பு திட்டங்களில்  நாங்கள் நம்புவதில்லை; மாறாக எங்கள் அடிப்படை/Basic உறுப்பினர்களுடன் அவர்களின் வசதி, ஆர்வம் மற்றும் நம்பிக்கை நிலைகளின் அடிப்படையில் நெருக்கமாக இணைந்து பணியாற்றும் நிலைத்தன்மையை நாங்கள் நம்புகிறோம். உங்கள் வணிகத்தை விளம்பரப்படுத்த நாங்கள் உங்களை அனுமதிக்கிறோம்

BTS சமூகத்தில் சேர்வதற்கான எந்த ஒரு உறுப்பினர் கட்டணம் இல்லை. இலவச  அடிப்படை உறுப்பினராக நீங்கள் முதலில் எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் சமூகங்களில் சேரலாம், பிறகு பிற அடிப்படை உறுப்பினர்களுடன் நெட்வொர்க்கில் ஈடுபடலாம்,எங்களின் பிசினஸ்  நெட்வொர்க்கிங் நிகழ்வுகள் மற்றும் ஆன்லைன் நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாம், பின்னர் எங்கள் வணிகத் ‘Visibility’ சேவைகளைப் கட்டணம் செலுத்தி பெறுவது அல்லது நெட்வொர்க்கிங் நிகழ்வுகள் ஸ்பான்சர் செய்வது குறித்து தகவலறிந்த முடிவை எடுக்கலாம். இவற்றின் மூலம் நீங்கள் பெரும் வணிக பலன்களைப் பெறுவீர்கள்!

நீங்கள் பெறும் நன்மைகள் பற்றிய அனைத்து விவரங்களையும் கீழே உங்களுக்கு வழங்கியுள்ளோம்.


 


BTS சமூகத்தில் புதிதாக இணைந்த அனைத்து அடிப்படை உறுப்பினர்களுக்கும் நன்றி. நீங்கள் நன்றாக தெரிந்துகொள்ள உதவுவதற்கு உங்களை BTS சமூகத்திற்கு அறிமுகப்படுத்துங்கள். சமூகத்தின் ஒரு விதியாகவும், நடைமுறையாகவும், உறுப்பினர்கள் நீண்டகாலம் எங்களுடன் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.எங்களுடன் இணைந்து பங்களிக்கவும், உங்கள் வணிகத்தை மேம்படுத்த எங்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்வோம்.

Profile Submission Process

BTS Profile Submission Process Tamil

BTS நெட்வொர்க்கிங் முறை

BTS Profile Submission Process Tamil

BTS சமுதாயக்குழு உங்களின் வாடிக்கையாளர்களை 4 விதமான முறையில் ஈர்த்து வணிகத்தின் வளர்ச்சிக்கு உதவுகின்ற பிசினஸ் நெட்வொர்க்கிங் தளமாகும். இந்தியாவில் இந்த நெட்வொர்க்கிங் முறையை கையாளுகின்ற முதல் சமுதாயக்குழு BTS தான் என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இதோ இதன் விவரங்கள் (Modes of Working) உங்களுக்காக:

– (Ethos) எதோஸ் (நம்பகத்தன்மை): உங்கள் பிசினஸின் நம்பகத்தன்மை (Listings & Search engine rankings) மூலம்.

– (Pathos) பாத்தோஸ் (கதை): உங்கள் பிசினஸின் வலிமையான உணர்வுகளை வரவழைப்பதற்கு கதை (Story) மூலம்.

– (Logos) லோகோஸ் (ஆய்ந்து அறிவது): உங்கள் பிசினஸை (Profile) ஆய்ந்து அறிவதன் மூலம்.

– (Kairos) கெய்ரோஸ்: சரியான அல்லது சந்தர்ப்பமான நேரத்தில் (Time) பிசினஸ் சமுதாயம் (Community) மூலம்.

இன்றே BTS சமுதாயக்குழுவில் சேர.